Sunday, May 16, 2010

ஏழுமணி ராசிபலனில்
ஒவ்வொரு ராசிக்காரனுக்கும்
வெவ்வேறு பலன்.
எட்டரைமணிச் செய்தியில்
பூகம்பம் நிகழ்ந்து
பத்தாயிரம் பேர் பலி.

Friday, May 14, 2010

விடிய விடிய காவல் காத்த
கோயில்  வாச்மேன்
நடை திறந்ததும் வேண்டிக்கொண்டார்
கடவுளே என்னைக்  காப்பாத்து . . . . .

Wednesday, May 12, 2010

"அட்சயதிருதிக்கு நகை வாங்கினால்
செல்வம் பெருகும்."
உண்மை தான். . . . . 
நகைக்கடைகாரனுக்கு மட்டும்.


[அட்சயதிருதி  என்ற பெயரில் விளம்பரம் போட்டு நடக்கும் வேடிக்கையான  கொள்ளையை பார்த்துச் சிரித்தபோது  எழுதியது.]
நீ தலைமேல் அடித்துத்
தேங்காய் உடைத்துக்கொண்டாய்.
உன் தலைக்குள்
ஒன்றும் இல்லைஎன்பதை 
நான்
புரிந்து கொண்டேன்.


[நேர்த்திக்கடன் என்ற பெயரில் உச்சந்தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட கோமாளித்தனத்தைப் பார்த்தபோது எழுதியது.]
பூனைகள் பாஷை
புரிவதில்லை நமக்கு
ஆனாலும்
நீ குறுக்கே போனதற்காக - அது
நிச்சயம் வருந்தியிருக்கும்.
தயவு செய்து
எனக்கு யாரும்
அருள்புரியாதீர்கள் . . .
நான்
சோம்பேரியாகிவிடக்கூடும்.
பிச்சைக்காரர்கள்
வாசலிலும்
வாசலுக்குளும்.

Saturday, May 8, 2010

                 இயற்கைப் புரிதல்
                                               28-04-10

இந்த வாழ்கை இயற்கை கொடுத்தது
                   என்பதில் மாற்றமில்லை.
அந்த இயற்கையை வணங்குவதென்பது
                   அறிவுக்குப் பொருந்தவில்லை.

இயற்கை என்பது யாறோ இருந்து
                   இயக்கும் விஷயமில்லை. - அதைப்
பயந்து வணங்கித் துதிப்பதனாலே
                   பயனொன்றும் விளைவதில்லை.

பொருளே முதலில் இருந்தது என்பது
                   பொருள் முதல் வாதம். - அந்தப்
பொருளை இயக்கும் அறிவைப் படைத்தது
                   மனிதனின் பிடிவாதம்.

இயற்கையைப் படைத்தது இறைவன் என்பது
                   இனிய கற்பனைதான். - சரி
இறைவனைப் படைத்தது யாரெனக் கேட்டால்
                   இதுவரை பதில் இல்லை.

பூகம்பம் நிகழ்ந்தால் புதைந்து மடிவதில்
                   பாதிபேர் பக்தர்கள் தான். - அதில்.
பூமாதேவிக்குப் பூசைகள் செய்த
                   பூசாரி இறந்திருப்பான்.

பூகம்பம் என்பது பூமிக்கு அடியினில்
                   நிகழ்கிற மாற்றமென்றும், - நம்
சாமிக்கும் அதற்க்கும் நிச்சயமாகச்
                   சம்பந்தமில்லை என்றும்,

அறிந்து சொன்னது அறிவியலென்பது
                   அனைவருக்கும் தெரியும். - அட
இருந்தும் நாம் ஏன் இறைவனைத் துதித்தோம் ?
                   இனிமேல் தேவையில்லை.

இயற்கையைக் காக்கிற வழிமுறை தேடி
                   எல்லோரும் பயணிப்போம். - அதை
வியந்து ரசித்து விரும்பி அணைத்து
                   விருத்தங்கள் பாடிவைப்போம்.
 
 To view the video of this poem please Click Hear