புதைந்த உண்மைகள்.
பக்தர்கள் பயணம் போன
பஸ் ஒன்று மரத்தில் மோதி
பத்துபேர் பலியானார்கள்;
பாதிபேர் காண வில்லை;
எட்டுபேர் கவலைக்கிடமாய்
இருக்கின்றார் என்ற செய்தி
துக்கத்தை தந்தால் கூட
துளைக்குமோர் கேள்வி என்னை.
என்பிள்ளை வாழ வேண்டும்.
எனக்கும் (ஓ)ர் வேலை வேண்டும்.
தம்பியைப் படிக்க வைக்கத்
தாராள செல்வம் வேண்டும்.
அன்னைக்கு ஆண்டு நுறு
ஆயுளும் வேண்டு(ம்) என்று
கும்பிட்டுத்தானே உந்தன்
கோயிலைத்தேடி வந்தோம் . . . ?
அன்னையைத் தவிக்க விட்டு
ஆற்றோடு சென்று விட்டோம்.
பிள்ளையைத் தவிக்க விட்டுப்
பிணமாக மிதந்து விட்டோம்.
இன்னுமா உங்களுக்குப்
புத்தியில் உறைக்கவில்லை?
என்கின்ற கேள்வி எந்தான்
இதயத்தைக் கிழிக்குதம்மா . . . .!
இதுவொன்றும் புதிய தல்ல
எப்போதும் நடப்பதே தான்.
மதிகெட்ட மனித ரெல்லாம்.
மறந்துதான் போனோம்; நாங்கள்
துதிக்கின்ற சாமி எங்கள்
துயரத்தைக் களைவதற்க்கு
உதிக்கவே இல்லை என்ற
உண்மையை மறந்து விட்டோம்.
நம்பிக்கை என்ற பெயரில்
நடக்கின்ற தவறை எல்லாம்
கம்மென்று பார்த்துக் கொண்டு
கண்மூடி வாழ்வதற்க்கு
பொம்மைகள் நாங்க ளல்ல.
பொறுக்கவே முடியா(து)இனிமேல்
கும்பிட்டு விழுவதற்க்குக்
கோயில்கள் தேவை இல்லை.
2 comments:
Edit
நாட்டாமை said...
உனக்கு மரணம் அந்த விநாயகனால்
என்றிருக்குது என்று சொன்ன சோதிடனும்
உயிரோடிருக்க நீயேன் லாரிமோதி இற்ந்தாய்?
பொய்த்துவிட்டது சோதிடம் என்று
புலம்பிவிட்டு காப்புத் தொகை கேட்டு
வக்கீலிடம் செல்ல அந்த ட்ரைவர்
பெயர் கேட்டு ஆளை அனுப்பி விசாரிக்க
அவன் பெயர் கணேசனாம் என்றுரைத்தனர்
நீயும் நானும் கடவுள் இல்லை எதற்கு அதற்கு பெரும் செலவு செய்கிறிர்கள்
என்று சொன்னால் நம்மை கல்லால் அடிப்பார்கள் இந்த மக்கள், அதே கல்லைத்தான் அவர்கள் விநாயகர் என்றும் சிவபிரான் என்றும் அம்மன் என்றும் சிற்பமாக செய்து வணங்குகிறார்கள்,குடிக்க பாலில்லாமலும்,உண்ண உணவில்லாமலும் எத்தினையோ இலச்சம் குழந்தைகளும் மக்களும் இருக்கிறார்கள் இந்த உலகில், கடவுளுக்கு செய்யும் செலவை அவர்களுக்கு செய்யலாம்,எந்த கடவுளும் எனக்கு சிலை வேண்டும் உருவ வழிபாடு வேண்டும் பாலாபிசேகம்,நெய் அபிஷேகம் செய்யவேண்டும் என்று சொன்னதில்லை எல்லாவற்றையும் நீயே செய்கிறாய் நீயே எடுத்தும் கொள்கிறாய் இது எந்த விதத்தில் நியாயம்?
Post a Comment